மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி மனிதச் சங்கிலி : திமுக அறிவிப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி வரும் 27ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2017, 5:48 am

DIN


சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி வரும் 27ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் இன்று காலை ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் ஜூலை 27ம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 4 மணிக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி மற்றும்  திருமுருகன் காந்தியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் சென்னையில் முரசொலி பவளவிழா நடைபெறும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.