கமல் மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
கமல் மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மதுரை: கமல் மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்துகொள்ள எனக்கு காலஅவகாசம் தேவை என்று கூறினார்.
மேலும், ஊழல் குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசுவது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுப்படுத்த வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வரும் 27 ஆம் தேதி அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...