/

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறும் சட்டத்தை நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: அதிமுக வலியுறுத்தல் 

புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற

News image
Updated On :24 ஜூலை 2017, 10:12 am

புதுச்சேரி:  புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற வேண்டுமென அதிமுக வலியறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்,ஏ. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரியில் உள்ள  தனியார் மருத்துவ  கல்லூரிகளில் அரசுக்கு  50 சதவீத இடங்களை  பெற சட்டம் இயற்றாமல் புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் கையூட்டு பெறுகிறது. மாணவர் நலனில் அக்கறையின்றி தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது.

நாளை அதிமுக பேரவை முற்றுகைப் போராட்டம்

காங்கிரஸ்}திமுக அரசின் செய்யப்படாத தன்மையை கண்டித்தும், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் இடங்களை பெற உரிய சட்டதிருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும், புதுச்சேரி அதிமுக சார்பில் வரும் 26 ஆம் தேதி (புதன்கிழமை) சட்டப்பேரவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். இதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநருக்கு அதிமுக அளிக்கும். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலகத்துக்கு கிரண்பேடி அறிவுறுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.