அகண்ட அலைவரிசை: பதிவிறக்க வேகம் இரு மடங்கு அதிகரிப்பு: பிஎஸ்என்எல் தகவல்

அகண்ட அலைவரிசையின் தொடக்க பதிவிறக்க வேகத்தை பிஎஸ்என்எல் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

அகண்ட அலைவரிசையின் தொடக்க பதிவிறக்க வேகத்தை பிஎஸ்என்எல் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) திட்டத்தில், ரூ.675, அதற்கு மேல் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தொடக்க பதிவிறக்க வேகம் (ல்ழ்ங் ஊமட ள்ல்ங்ங்க்) இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்க பதிவிறக்க வேகம் 2 எம்பிபிஎஸ் வேகத்திலிருந்து 4 எம்பிபிஎஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், தொடக்க பதிவிறக்கத்துக்கு பிறகு, 1 எம்பிபிஎஸ்-லிருந்து 2 எம்பிபிஎஸ் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பெறலாம்.
மேலும், அலைவரிசை வரம்பு (பேண்ட்வித் லிமிட்) ரூ.249 திட்டம், அதற்கு மேல் உள்ள அனைத்து அகண்ட அலைவரிசை திட்டங்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 2 எம்பிபிஎஸ் நிலையான வேகத்தில் புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 599 எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சிறப்புசலுகையாக அனைத்து காம்போ அகண்ட அலைவரிசை திட்டங்களிலும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அளவில்லாத அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதுபோல், மற்றொரு சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டிருக்கும் எக்ஸ்பிரியன்ஸ் பிபி யுஎல்டி 249, தொலைபேசி திட்டமான எல்எல் 49 ஆகிய திட்டங்கள் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், தகவல்களுக்கு வாடிக்கையாளர் சேவை மையம், 1800 345 1500 எனும் இலவச இணைப்பில் தொடர்பு கொள்ளவும் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com