மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் கைது

சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கச்சிராயன்பாளையம் ஏரியை

News image
Updated On :27 ஜூலை 2017, 5:53 am

DIN


கோவை: சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் மு.க.ஸ்டாலின். பின்னர் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கச்சிராயன்பாளையம் ஏரியை பார்வையிடுவதற்காக கேவை கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு ஸ்டாலினை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் திமுக சார்பில் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த எருமப்பட்டி கச்சராயன்குட்டை ஏரி தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை நேரில் பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக காரில் கொங்கணாபுரத்துக்கு வந்துகொண்டிருந்த போது கோவை கணியூர் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி கட்சராயன்பாளையம் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிடுவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் எஸ்.பி ராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.