மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மு.க.ஸ்டாலின் கைது: தலைவர்கள் கண்டனம்

சேலம் மாவட்டத்தில் ஏரியைப் பார்வையிடச் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில், கைது

News image
Updated On :27 ஜூலை 2017, 7:47 pm

DIN

சேலம் மாவட்டத்தில் ஏரியைப் பார்வையிடச் சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில், கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை மக்களுக்கு ஒப்படைக்கச் சென்ற மு.க.ஸ்டாலினை கோவையில் காவல்துறையினர் தடுத்திருப்பதும் சட்டவிரோத செயலாகும். மனிதச் சங்கிலிப் போராட்டம் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதுதான். இந்தப் போராட்டத்துக்குத் தடை விதித்து இருப்பதும் முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.
ஜி.ராமகிருஷ்ணன்: சேலத்தில் திமுகவினர் சீர்படுத்திய ஏரியை பார்வையிடச் சென்ற ஸ்டாலினை சேலம் செல்வதற்கு முன்பாக கோவையிலேயே போலீஸார் கைது செய்துள்ளனர். காவல் துறையின் இந்த ஜனநாயக விரோதமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
போராட்டங்களை ஒடுக்குவது, போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவது என்பதே தமிழக அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஜனநாயக நாட்டில் அநீதிகள் நடக்கும்போது அவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தக் கூடாது என்பது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல.
இரா.முத்தரசன்: ஏற்கெனவே ஜனநாயக முறையில் போராடி வருபவர்களை குண்டர் சட்டத்தின் மூலம் சிறையிலடைத்து ஜனநாயக விரோதப் போக்கை வெளிபடுத்தி வரும் தமிழக அரசு, தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்து தமிழகத்தில் பதற்ற சூழலை உருவாக்கி வருகிறது. இத்தகைய போக்கு ஜனநாயகத்தில் கடும் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறவேண்டிய தேவை எதுவும் இல்லை. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு எதுவும் போடப்படவில்லை. அப்படியிருக்கும் போது கோவை மாவட்ட எல்லையிலேயே வைத்து ஸ்டாலினை போலீஸ் கைது செய்திருக்கிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அதிகாரத்துவ அத்துமீறல்களுக்கு இடமளிக்கக்கூடாது. தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
தொல்.திருமாவளவன்: சேலத்தில் தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறவேண்டிய தேவை எதுவும் இல்லை. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு எதுவும் போடப்படவில்லை. அப்படியிருக்கும் போது கோவை மாவட்ட எல்லையிலேயே வைத்து ஸ்டாலினை போலீஸ் கைது செய்திருக்கிறது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அதிகாரத்துவ அத்துமீறல்களுக்கு இடமளிக்கக்கூடாது. தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
கி.வீரமணி: சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட எருமைப்பட்டியில் திமுக சார்பில் தூர்வாரப்பட்டுள்ள கட்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற மு.க.ஸ்டாலினை நடு வழியிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். மாறாக மனித சங்கிலியைத் தடை செய்வது தமிழக அரசுக்கு இந்தப் பிரச்னையில் உள்ள அக்கறையைச் சந்தேகப்படும்படி செய்கிறது.
ஜவாஹிருல்லா: கட்சராயன்பாளையம் ஏரியைத் திமுகவினர் தூர்வாரியது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது. இதனைப் பார்வையிடச் சென்ற மு.க. ஸ்டாலினை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தது ஜனநாயக விரோதச் செயலாகும். தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைத் திருப்திப்படுத்தும் வகையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.