ஜி.ராமகிருஷ்ணன் கைது: ஸ்டாலின், திருநாவுக்கரசர் கண்டனம்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்
Published on
Updated on
1 min read

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை ராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜி.ராமகிருஷ்ணனை , மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கேட்டு திமுக மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து மிகப்பெரிய மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினோம். இதே கருத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணனைக் கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு மிகப்பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.
சு.திருநாவுக்கரசர்: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி நடைபெற்ற மனிதச்சங்கிலியை போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி ஜி. ராமகிருஷ்ணனையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைது செய்தது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்குப் பதிலாக, அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதும், போராட் டத்தை நசுக்க முயற்சிப்பதும் எந்த வகையிலும் தமிழகத்துக்குப் பயன் தராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com