
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று மதியம் அஞ்சலி செலுத்தினார்.
ஜி.எஸ்.டி தொடர்பான கருத்தரங்கம் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராம் ஆகியோர் தற்பொழுது சென்னை வந்துள்ளனர்.
கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர்கள் இருவரும், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களுடன் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரும் வருகை தந்தார்.
சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்பு இருவரும் பல்கலைக்கழக கருத்தரங்கத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.