குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இன்று மாலைக்குள் சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணிகள் துவங்கும்: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி! 

தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று மாலைக்குள் துவக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2017, 7:03 am

DIN

சென்னை: தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று மாலைக்குள் துவக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தின் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது.

விபத்தினால் சேதமடைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தினை இடிக்கும் பணிகள் இன்னும் இரண்டு மணி  நேரத்திற்குள் துவங்கும்.  கட்டிடத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளதால், மக்களின் பாதுகாப்பபினை கருதி கட்டிடத்தினை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டிட இடிப்பு பணிகளில் ஆட்கள் மற்றும்  ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பணியானது மொத்தம் மூன்று நாட்களில் நிறைவடையும்.  இதற்கு ஆகும் செலவானது சென்னை சில்க்ஸ்  நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும்.

இதே போல விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தொடர்பாக பாரபட்சமின்றி  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.