மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின

தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.

News image
தீ விபத்தில் சேதமடைந்த கட்டடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
Updated On :1 ஜூன் 2017, 9:12 pm

DIN

தியாகராய நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.
கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. கடந்த 2 நாள்களாக கட்டடத்தின் பெரும்பகுதியில் தீ அணைக்கப்பட்டாலும், தீப்பொறியினால் அவ்வப்போது தீப்பற்றி எரிகிறது. இதனால், கட்டடம் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் எப்போது எந்த தளத்திலிருந்து கட்டுமானம் சரியும் எனும் சூழல் நிலவியது.
நண்பகல் 1 மணியிலிருந்து..: இதனால், சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி வணிக கட்டடத்தை இடிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, பேரிடர் மீட்புக்குழுவினர் ஆகியோர் சேர்ந்து கட்டடத்தை இடிக்கும் ஆயத்த பணிகளை நண்பகல் 1 மணியளவில் இருந்து தொடங்கினர். அதன்படி, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் தேக்கி வைக்கப்பட்ட கட்டட கழிவுப்பொருள்களை 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
15 அடிக்கு சமநிலை மட்டம் உருவாக்க..: கட்டுமான கழிவுப்பொருள்கள் 15 அடியளவுக்கு கொட்டப்பட்டு, நிரப்பப்பட்டது. அதன்பிறகு, சமன்படுத்தி பின்னர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கட்டடத்தை 3 ஜாகிராக் கட்டர் இயந்திரம் (காங்கிரிட் கட்டட சுவர்களை இடித்து கட்டடத்தின் உட்புறமாக கொட்டும் முறையில் செயல்படும் இயந்திரம்), துளையிடும் நவீன கருவி மூலம் நள்ளிரவுக்குப் பின்னர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.
அதிக பிரகாசமுள்ள விளக்குகள்: அதுபோல், கட்டடத்தை சுற்றியும் 200க்கும் மேற்பட்ட அதிக பிரகாசம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டடம் 3 நாள்களுக்குள் இடித்து முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.