/

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு: ஆர். வைத்திலிங்கம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது என்றார் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:40 pm

DIN

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது என்றார் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். எனவே, எந்த நிபந்தனையும் இன்றி வந்து இணையலாம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இரு அணிகளும் ஒற்றுமையுடன் இணைய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் செயல்படும். அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். இதுதான் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.