தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த


தஞ்சாவூர்: தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல, ஜெயலலிதாவின் ஆட்சி என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பருத்தியப்பர்கோவில் கிராமத்தில் இன்று நடைபெற்ற பல்நோக்கு திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
'அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். எனவே, எந்த நிபந்தனையும் இன்றி வந்து இணையலாம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இரு அணிகளும் ஒற்றுமையுடன் இணைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தற்போது நடப்பது பினாமி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் செயல்படும். அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். இதுதான் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம் என்றார் வைத்திலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...