

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை தில்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ள நாராயணசாமி, மத்திய அமைச்சர்கள், அரசு செயலர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், நீட் தேர்வு, மருத்துவப்படிப்பு கலந்தாய்வு குறித்து சுகாத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுய விளம்பரங்களுக்காக அதிகாரங்களை மீறி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது, அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி உயர்வை குறைக்க வலியுறுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில் முதல்வர் தில்லி சென்றுள்ளது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.