பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விடியோவில் இருப்பது நான்தான்; குரல் என்னுடையது அல்ல: சரவணன் எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏக்களிடம் சசிகலா அணியினர் பேரம் பேசியதாக வெளியான விடியோ காட்சி குறித்து மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் சென்னையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :13 ஜூன் 2017, 9:57 am

DIN


சென்னை: அதிமுக எம்எல்ஏக்களிடம் சசிகலா அணியினர் பேரம் பேசியதாக வெளியான விடியோ காட்சி குறித்து மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் சென்னையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சரவணன், அந்த விடியோவில் இருப்பது நான்தான். அது பழைய விடியோ. வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்தது. ஆனால், அதில் வரும் குரல் என்னுடையது அல்ல, போலியாக டப்பிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் தமிமுன் அன்சாரி, கருணாஸ் உட்பட மூன்று பேருக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்கள் பணம் வாங்கியதாகக் கூறியுள்ள தகவல்கள் பொய்யான கருத்து. அவர்கள் பற்றி நான் எதுவும் பேசவில்லை. அதுபோன்ற குதிரை பேரம் பற்றி எதுவுமே பேசவில்லை என்று கூறினார்.

பேட்டி எடுத்த ஷானவாஸ் உசேன் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஷானவாஸ் உசேன் யார் என்றே எனக்குத் தெரியாது. நான் பேசியதாகக் கூறி டப்பிங் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இது பற்றி கிரிமினல் வழக்குத் தொடரப்படும். சட்ட நிபுணர்களுடன் பேசி வருகிறேன் என்றார்.

பன்னீர்செல்வம் இது குறித்து கேட்டாரா என்றதற்கு, நேற்று இரவு 8 மணிக்கு நான் இந்த செய்தியைப் பார்த்தேன். உடனே அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தேன். நேராக இங்கே வந்து அவரிடம் உரிய விளக்கம் கொடுத்துள்ளேன் என்றார்.

என்னைப் பற்றி ஊடகங்களில் ஏற்கனவே தவறான செய்திகள் வெளியாகின. இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் அணிமாறி போய்விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் நான் இப்போதும் இந்த அணியில்தான் இருக்கிறேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.