மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இரட்டை இலை: ஓபிஎஸ் தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விதித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :16 ஜூன் 2017, 7:26 am

DIN


புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விதித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடைசி நாளான இன்று ஓபிஎஸ் அணி தரப்பில் 20 ஆயிரம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓபிஎஸ் அணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை 3.80 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதிமுக தலைமைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் அஇஅதிமுக என்ற கட்சிப் பெயரையும் அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தெரிவித்தது. 

இதையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் தரப்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பில், பேரவை தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ். பசும்பொன்பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவுக்கு உரிமை கோரி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 55 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். மேலும் 50 முதல் 60 லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை கோரியுள்ளோம்' என்றார்.

அதிமுகவுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் மதுசூதனன் தரப்பும், சசிகலா தரப்பும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜூன் 16) வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது. 

எனவே, கடைசி நாளான இன்று சசிகலா அணி சார்பில் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அதன் வழக்குரைஞர் ராகேஷ் சர்மா தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் கூடுதலாக பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.