/

பெங்களூரு சிறையில் சசிகலா - தினகரன் மீண்டும் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

பெங்களூரு: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை,அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களே வெளிநடப்பு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை,அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார்.அவருடன் அவரது மனைவி அனுராதா, உறவினரான மருத்துவர் வெங்கடேஷ் ஆகியொருமுடன் சென்றார்கள்.

முன்னதாக அதிமுக எம்.பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று காலை சசிகலாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.