/

பள்ளி, கல்லூரிகளில் சட்டக் கல்வி: அமைச்சர் சி.வி.சண்முகம்

பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை சட்டங்கள் குறித்த பாடத்திட்டங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:49 pm

DIN

பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை சட்டங்கள் குறித்த பாடத்திட்டங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் பேசும்போது, சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. 
இதனால் சட்டங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டுக் கூறியது: காங்கிரஸ் உறுப்பினர் கூறுவது நல்ல யோசனை. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப்படும். 
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிப்படை சட்டத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்க்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.