/

அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு - ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு

அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் எதிர்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்து பேசி வருகின்றனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:16 pm

DIN

சென்னை: அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் எதிர்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்து பேசி வருகின்றனர்.

ஆளும் அதிமுக கட்சியின் கூட்டணியில் உள்ள ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவது தொடர்பாக, சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினை 3 பேரும் சந்தித்தனர். சந்திப்பின்போது, பபேரறிவாளனை பரோலில் விடுவது தொடர்பாக, சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு ஆதரவுக் கோரினர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு தனது ஆதரவை அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.