/

7வது ஊதியக் குழு பரிந்துரை ஆய்வுக் குழுவுக்கு கால அவகாசம்: தமிழக அரசு

7வது ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:19 pm

DIN


சென்னை: 7வது ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பான 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதக் காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றுடன் அந்த குழுவின் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், பரிந்துரைகளை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.