பட்டாசு ஆலையில் வெடி விபத்து: சிவகாசி அருகே 7 பேர் பலி!
சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சிவகாசி: சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமம் வெற்றிலையூரணி, இங்கே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில்தான் இன்று காலை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி அங்கே பணிபுரியும் மூன்று பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயமடைந்த மேலும் சிலர் மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.
விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...