புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஓபிஎஸ் அணியினர் இன்று மாலை மக்கள் நலக்  கூட்டணி தலைவர்களுடன் சந்திப்பு!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினர் இன்று மாலை மக்கள்  நலக்    கூட்டணித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்க ள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2017, 10:25 am

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினர் இன்று மாலை மக்கள்  நலக்    கூட்டணித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்க ள் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி, தேமுதிக மற்றும் தீபா தலைமையிலான எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை உள்ளிட்டவை களமிறங்க உள்ளன.

தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை நேற்று காலை விஜயகாந்த் அறிவித்தார். திமுக செயல் தலைவரான ஸ்டாலின் ஜனநாயக சக்திகள் திமுகவுக்கு இந்த இடைத் தேர்தலில்   ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினர் இன்று மாலை மக்கள்  நலக்    கூட்டணித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பானது தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.