லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனன் போட்டி 

வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி சார்பாக ..

News image
Updated On :16 மார்ச் 2017, 12:00 pm

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி சார்பாக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக அக்கட்சியின் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், திமுக சார்பாக மருது கணேஷ் என்பவரும் போட்டியிட உள்ளனர். எம்.ஜி.ஆர்-அம்மா -தீபா பேரவை சார்பாக அதன் தலைவர் தீபா போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி சார்பாக யார் போட்டியிடுவார் என்பதை தீர்மானிக்கும் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்,செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தின் முடிவில் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அதிருப்தி அணி சார்பாக அந்த அணியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் போட்டியிடுவார் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.