சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பி.எ.ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் , 'அந்நியச் செலவாணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளவரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கபட்டிருப்பது செல்லாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளில் கிரிமினல் வழக்குக்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட தடை என்று கூறப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அவ்வாறு நடந்து கொள்வதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை. எனவே குறிப்பிட்ட அந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்து, அவை அரசியல் சட்ட விரோதமென்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவானது இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் மற்றும் டீகா ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் உரிய அதிகாரிகளை அணுகி நிவாரணம் பெறலாம்' என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


