எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சசிகலா தரப்புக்கு ஆட்டோ ரிக்‍ஷா; பன்னீர்செல்வத்துக்கு இரட்டை மின் விளக்கு?

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்புக்கு ஆட்டோ ரிக்‍ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :23 மார்ச் 2017, 6:28 am

தினமணி


புது தில்லி: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா தரப்புக்கு ஆட்டோ ரிக்‍ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சசிகலா தரப்பினர் வலியுறுத்தியதைப் போலவே, அதிமுக அம்மா அணி என்ற பெயரே கட்சிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி ஊடகங்களில்  செய்தி வெளியாகியுள்ளது.

அதே சமயம், ஓபிஎஸ் தரப்பில் இரட்டை மின் விளக்குடன் கூடிய கம்பம் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதையே தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

அம்மா அதிமுக என்ற பெயரை பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்களுக்கு புதிய பெயர் வழங்கப்பட்டிருப்பதாகவும், 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' என்ற பெயரில் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.