ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தில் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது (ஏப்ரல் 12-புதன்கிழமை) அந்தத் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

தினமணி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது (ஏப்ரல் 12-புதன்கிழமை) அந்தத் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை மாவட்டத்தில் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றக் கூடிய அந்தத் தொகுதியைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வரும் 12-ஆம் தேதியன்று அளிக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு சார்ந்த, அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளும் மூடப்பட்டிருக்கும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.