வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்காக ரூ.39,565 கோடி, வர்தா புயல் பாதிப்புகளை சரி செய்வதற்காக ரூ.22,573 கோடி என மொத்தம் ரூ.62,138 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது. ஆனால், மத்திய அரசோ வறட்சி நிவாரணத்திற்கு ரூ.1748 கோடி, வர்தா புயலுக்கு ரூ.266 கோடி என மொத்தம் ரூ.2014 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது தமிழக அரசு கோரியுள்ள நிதியில் வெறும் வெறும் 3.24 விழுக்காடு மட்டும் தான். வறட்சியை சமாளிக்க ஒரு மாநிலம் கோரிய நிதியில் வெறும் 3.24 விழுக்காட்டை மட்டும் ஒதுக்கீடு செய்வது அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் மட்டுமின்றி, மிகப்பெரிய அவமானமும் ஆகும்.