புதுதில்லி: நெடுவாசல் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமிக்கு அடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் திட்டமிட்டபடி நாடு முழுவது 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது.
அதன்படி இன்று புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய பெட்ரோலியத்துறை சார்பாக உயர் அதிகாரியான ராகேஷ் மிஸ்ரா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கர்நாடகாவின் ஜெம் லாபாரட்டரீஸ் நிறுவனமும், காரைக்காலில் பாரத் ரிசோர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளன.
இதனைத் தொடர்ந்து திட்டத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டங்கள் மீண்டும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


