தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்
தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.


தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள். விவசாயிகளின் கடன்களை மாநில அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...