கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2017, 11:00 am

தினமணி

தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தில்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள். விவசாயிகளின் கடன்களை மாநில அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும்.  மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.