ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் புகார்!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் என திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான


சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் என திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்காளர்களை பணம் கொடுத்து வளைக்க முக்கியமான கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் என ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் துணையுடன் காவல்துறையினர் தவறான செயல்படுகிறார்கள் என குற்றச்சாட்டிய ஸ்டாலின், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நேர்மையாக நடக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கட்சிகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும். அதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற்றுவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதுதான் கட்சிகள் போடும் கணக்கு. அதற்காகத்தான் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்களை பணத்தை கொடுத்து கணக்கு பண்ணுகிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...