பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கெடிலம் ஆற்றில் சாலை அமைத்து மணற் கொள்ளை: சார் ஆட்சியர் ஆய்வில் பகீர் உண்மை

பண்ருட்டி அருகே மணல் கொள்ளை நடைபெறும் கெடிலம் நதியை கடலூர் மாவட்ட சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

News image
Updated On :30 மார்ச் 2017, 9:50 am

சீனிவாசன்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் கொள்ளை நடைபெறும் கெடிலம் நதியை கடலூர் மாவட்ட சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, கெடிலம் ஆற்றின் குறுக்கே மணல் கடத்தலில் ஈடுபடும் டிப்பர் லாரிகள் செல்ல வசதியாக மணல் கொட்டப்பட்டு மேடான சாலை அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த சார் ஆட்சியரும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பண்ருட்டி அடுத்துள்ள வேலிருப்பு கிராமத்தில் மனு நீதி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிவில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் செம்மேடு அருகே உள்ள கெடிலம் நதியில் கடந்த பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், நாள் ஒன்றுக்கு சுமார் 100 டிப்பர் லாரி மணல் அனுமதியின்றி கடத்தப்படுவதாகவும் இது குறித்து வட்டாட்சியர் அலுவலகம், காவல்துறை, பொதுப் பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு 25க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினர். சுமார் 15 முதல் 20 அடி ஆழத்துக்கு மணல் தோண்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய சிரமம் ஏற்படுவதாகவும், குடிநீருக்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக புகார் கூறினர்.

மேலும் மணல் கொள்ளை நடைபெறும் கெடிலம் ஆற்றை பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற சார் ஆட்சியர், மணல் கொள்ளை நடைபெறும் கெடிலம் ஆற்றை நேரில் சென்று பார்வையிட்டார். உடன் வட்டாட்சியர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் இருந்தனர்.

இது குறித்து சார் ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மணல் கொள்ளையர்கள் கெடிலம் நதியில் சாலை அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை சார் ஆட்சியர் பார்த்திருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களும் கருதுகிறார்கள்.

பண்ருட்டி கிராமம் அருகே மேல்இருப்பு கிராமத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில், சார் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை தோட்டக் கலை மற்றும் விவசாயித் துறை சார்பில் மருந்து தெளிப்பான், மற்றும் மா,பலா,முந்திரி மரக் கன்றுகளை வழங்கியும், பட்டா மாற்றம் போன்றவற்றையும் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.