வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

டிடிவி தினகரனுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு

ஆர்.கே.நகரில் அதிமுக (அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Updated On :31 மார்ச் 2017, 8:54 am

ஆர்.கே.நகரில் அதிமுக (அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகளின் நிர்வாகிகள், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:-
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்பின் தலைவர் பாஸ்டர் ஜெ.ஜெ.டி. விக்டர், புதிய உழைப்பாளர் கட்சியின் நிறுவனத் தலைவர் திருவாரூர் காந்தி தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலரும் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.