/

மே 10 முதல் சென்னை - ஆமதாபாத் இடையே வாராந்திர விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சஃபர் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மே 10-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:26 pm

DIN

சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சஃபர் விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மே 10-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்தப் புதிய விரைவு ரயில் தனது முதல் பயணத்தை மே 8-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி தொடங்கப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 22919: ஒவ்வொரு புதன்கிமையும் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு ஆமதாபாத் சென்றடையும்.
ரயில் எண் 22920: திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.