/

ரஜினிக்கு மும்பை தாதா மகனிடமிருந்து கொலை மிரட்டல் கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

News image
Updated On :13 மே 2017, 5:16 am

DIN

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம் மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் தாராவி பகுதியை மையப்படுத்தி படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனை அறிந்த மும்பை 'தாதா' ஹாஜி அலிமஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Story image

அந்தக் கடிதத்தில், நான் மறைந்த தாதா ஹாஜி அலி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன். "என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ்தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற திரைப்படத்தில் என்னுடைய வளர்ப்புத் தந்தை மிர்சாவை, மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழலுலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளீர்கள் என்பதை அறிந்தேன்.

இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை எந்த வழக்கிலும் சிக்கவில்லை. குற்றச் செயலுக்காக எந்த நீதிமன்றமும் அவருக்கு தண்டனை அளிக்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. அப்படி தவறாக காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் மிரட்டல் விடுத்து ரஜினியின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.