மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுக்கோட்டை: விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை

புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பூட்டப்பட்டிருந்த அறையில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

News image
Updated On :17 மே 2017, 6:46 am

DIN


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் பூட்டப்பட்டிருந்த அறையில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.கே நகரில் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த சோதனையின் போது, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை. எனவே, இன்று புதுக்கோட்டைச் சென்ற அதிகாரிகள், அந்த அறையைத் திறந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கரின் வீட்டில் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்ட போது, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.