புதுச்சேரியில் ஜவஹர்லால் நேரு நினைவு நாள்: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி உள்பட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
Updated on
1 min read

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி உள்பட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியாள் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ. டி.ஜெயமூர்த்தி, நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, ஏகேடி ஆறுமுகம், உள்ளிட்டோர் நேருவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காலையிலே எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள தனது வீட்டில் முதல்வர் நாராயணசாமி நேரு படத்துக்கு மாலை அணிவித்தார். செய்தி விளம்பரத்துறை பின்னர் அரசு செய்தி விளம்பரத்துறை சார்பில் கடற்கரை அருகே உள்ள நேரு சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்தார். அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் வைத்திலிங்கம், துணைத் தலைவர் சிவக்கொழுந்து, ஜெயமுர்த்தி, மற்றும் செய்தித்துறை இயக்குநர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 100 அடி சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேரு படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மாலை அணிவித்தார். நிர்வாகிகள் பாலன், ஜெயபால், வேல்முருகன், ஞானசேகரன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com