தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மாட்டிறைச்சி தடை: மக்களின் உணர்வை அதிமுக மதிக்கும்

மாட்டிறைச்சி தடை பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அதிமுக மதிப்பளிக்கும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

News image
Updated On :30 மே 2017, 8:25 pm

மாட்டிறைச்சி தடை பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அதிமுக மதிப்பளிக்கும் என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
கரூர் மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாமி கும்பிட வந்த அவர் கூறியது:
தமிழகம் அதிகளவில் பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாநிலம். தமிழகத்தில் ஜிஎஸ்டி மசோதா கொண்டுவந்தால் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தார். மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படும்போதுகூட அதிமுக எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் மற்ற மாநிலங்களின் எம்பிக்கள் ஆதரவோடு மசோதா வெற்றி பெற்றுவிட்டது.
தற்போது இந்த மசோதாவில் திருத்தம் செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். மற்ற மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளதால் நாமும் இதைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்காக மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாட்டிறைச்சி தடையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அதிமுக மதிப்பளிக்கும். மாட்டிறைச்சி தடை விஷயத்தில் அதிமுகவுக்கு உடன்பாடில்லை என்றார் தம்பிதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.