ஸ்ரீதரின் தற்கொலைக்குக் காரணம் என்ன?: சமையல்காரர் தரும் தகவல்கள்
அதிக மன உளைச்சலால்தான் ரெளடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சமையல்காரர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.


அதிக மன உளைச்சலால்தான் ரெளடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சமையல்காரர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த, ரெளடி ஸ்ரீதர் கடந்த மாதம் 4-ஆம் தேதி கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, 12 நாள்களுக்குப் பிறகு ஸ்ரீதரின் உடல் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதருடன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவரது விவரங்கள் குறித்தும் ஸ்ரீதரின் சமையல்காரர் தேவேந்திரனுக்குத் தெரியும் எனக் கூறப்படுகிறது. அதுபோல், ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டபோது தேவேந்திரன் மட்டும் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தேவேந்திரனை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு கம்போடியாவிலிருந்து பெங்களூரு வந்த தேவேந்திரன், விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பெங்களூருவுக்கு விரைந்த காஞ்சிபுரம் போலீஸார், தேவேந்திரனை காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் தேவேந்திரன் தெரிவித்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஸ்ரீதரின் குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததையடுத்து, அமலாக்கத் துறை அவரது சொத்துகளை முடக்கியது. தொடர்ந்து, பணப் பரிவர்த்தனைகளையும் போலீஸார் முடக்கினர். இதனால், கடந்த 3 மாத காலமாக பணம் கிடைக்காததால் பெரும் நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார். தொடர்ந்து, ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் மூலம் பல்வேறு தகவல்களை போலீஸார் பெற்றனர். அதன்மூலம், போலீஸார் தன்னை நெருங்குவதை உணர்ந்த ஸ்ரீதர், அவரது மகன்மீது கோபத்தில் இருந்தார்.
எனவே மகன் சந்தோஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார். மேலும், தன் குடும்பத்தினர் தனக்கு எதிராக மாறியதை உணர்ந்த ஸ்ரீதர், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திலேயே பேசி வந்தார். குடும்பத்தினருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தார். ஆனால், இதற்குக் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
மன உளைச்சல் அதிகரித்ததையடுத்து, கடந்த அக்டோபர் 4- ஆம் தேதி சயனைடு விஷம் கலந்த உணவை ஸ்ரீதர் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, ரத்த வாந்தி எடுத்தபோதுதான் அவர் உணவில் வேறு எதையோ கலந்து உட்கொண்டது தெரியவந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேவேந்திரனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...