47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா: நவ.24 இல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 4:09 am

தினமணி

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இந்த விழாவினையொட்டி, நவம்பர் 23 ஆம் தேதி வாஸ்துசாந்தி நடைபெற்று, 24 ஆம் தேதி காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் கம்பத்தடி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்னிலையில்  கொடியேற்றம் நடைபெறுகிறது.

விழாவினை முன்னிட்டு, சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளிபாலிப்பார்.

டிசம்பர் 1 ஆம் தேதி  8 ஆம் நாள் திருவிழாவாக மாலை 6.30 மணியிலிருந்து 6.45 மணிக்குள் பட்டாபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 2 ஆம் தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும்.  

விழா ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையர் ப. கவிதா பிரியதர்சினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.