இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாகை மாவட்டத்தில் 4-ஆம் நாளாக மீன்பிடித் தொழில் முடக்கம்

நாகை மாவட்டத்தில் நீடித்து வரும் தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை 4-ஆம் நாளாக மீன்பிடித் தொழில் முடக்கமடைந்திருந்தது.

News image
கடல் சீற்றம் காரணமாக, மீன்பிடிப்புக்குச் செல்லாமல் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுக படகுத் துறையில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகளின் ஒரு பகுதி.
Updated On :2 நவம்பர் 2017, 7:25 pm

DIN

நாகை மாவட்டத்தில் நீடித்து வரும் தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை 4-ஆம் நாளாக மீன்பிடித் தொழில் முடக்கமடைந்திருந்தது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நிலைபெற்றுள்ளது. 
இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் பலத்த மற்றும் மிதமான மழை நீடித்து வருகிறது.
வானிலை மாற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. 
கடல் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாலும், கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 அடி உயரத்தில் எழும்புவதாலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு உகந்த சூழல் இல்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, தொடர்ந்து 4-ஆம் நாளாக வியாழக்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான நூலிழைப் படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை என மீனவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 நாள்களாக மீன்பிடிப்பு இல்லாததன் காரணமாக, நாகை மாவட்டத்தில் மீன் உணவுத் தேவையில் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் மீன் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.