மதச்சார்பின்மையே இந்தியாவின் ஆன்மா: அபிஷேக் சிங்வி
இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா மதச்சார்பின்மைதான் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் சிங்வி கூறினார்.


இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா மதச்சார்பின்மைதான் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் சிங்வி கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணி கலாசார அகாதெமி மற்றும் கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தின் 64 -ஆவது ஆண்டுவிழாவையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "இந்திய ஜனநாயகத்தின் தூண்கள்' என்ற தலைப்பில் அபிஷேக் சிங்வி பேசியது:
காந்தியின் மூலம் அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா. உலக நாடுகளில் ஜனநாயகத்துக்காகப் போற்றப்படும் நாடு இந்தியா. மதச்சார்பின்மையே இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக இருந்து வருகிறது. என்னைப் பொருத்தவரையில் மதச்சார்பின்மை ஒருவரின் சுயபுரட்சி என்றுதான் சொல்வேன். மதச்சார்பின்மை கொள்கை இந்தியாவுக்கு அவசியமான ஒன்று.
ஒரே கட்டமைப்பு எப்படி சாத்தியம்? இந்திய அட்டவணையில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை இல்லாமல் பல்வேறு மாநில மொழிகள் உள்ளன. பல மதங்கள் உள்ளன. கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் வேறுபாடுகள் உள்ளன. இதில் எப்படி ஒரே கட்டமைப்பைக் கொண்ட இந்தியாவை உருவாக்க முடியும்?
மாநில முதல்வர்களின் கருத்துகளை அறிந்து... கூட்டாட்சி தத்துவம் என்பது முக்கியமானதாகும். கூட்டாட்சியைக் காப்பதற்கு தற்போது நீதிமன்றங்கள் உள்ளன. மத்திய அமைச்சர்கள் மட்டும் முடிவு செய்வதாக சட்டங்கள் இருந்துவிடக் கூடாது. மாநில முதல்வர்களின் கருத்துகளை அறிந்து செயல்படுவது என்பதே கூட்டாட்சியாகும்.
மாநிலத்தின் தேவையை அறிந்து பகிர்ந்து அளிப்பதாக நிதி மேலாண்மை இருக்க வேண்டும்.
நியாயமாக தீர்ப்பு வேண்டும்: மக்கள்தொகைக்கேற்ப, நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலமே வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும். நாடாளுமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற மனப்பாங்கின் காரணமாகவும் சில வழக்குகளில் பிரச்னை எழுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
பத்திரிகை துறையினர் தங்களது ஜனநாயகப்பூர்வமான கடைமையை நிறைவேற்ற வேண்டும் என்றார் அபிஷேக் சிங்வி.
இந்த நிகழ்ச்சியில், பத்திரிகைûயாளர் என்.ராம், திருவல்லிக்கேணி கலாசார அகாதெமி தலைவர் ஜி.நாராயணசாமி, காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உள்ளிட்டோப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...