பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளைத் தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

News image
மழை நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள்.
Updated On :2 நவம்பர் 2017, 11:12 pm

DIN

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளைத் தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 2 முதல் 3 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் துறை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:-
போர்க்கால அடிப்படையில்... கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலம் - 1 (திருவொற்றியூர்) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன்.
மண்டலம் - 2 (மணலி) சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.
மண்டலம் - 3 (மாதவரம்) உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் பென்ஜமின்.
மண்டலம் - 4 (தண்டையார்பேட்டை) கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி.
மண்டலம் - 5 (ராயபுரம்) மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தொழில் துறை அமைச்சர் சம்பத்.
மண்டலம் - 6 (திரு.வி.க.நகர்) மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.
மண்டலம் - 7 (அம்பத்தூர்) தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் பாண்டியராஜன், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
மண்டலம் - 8 (அண்ணாநகர்) வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன்.
மண்டலம் - 9 (தேனாம்பேட்டை) மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி.
மண்டலம் - 10 (கோடம்பாக்கம்) மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா.
மண்டலம் 11 (வளசரவாக்கம்) உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு.
மண்டலம் - 12 (ஆலந்தூர்) உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி.
மண்டலம் - 13 (அடையாறு) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில்.
மண்டலம் - 14 (பெருங்குடி) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி.
மண்டலம் 15 (சோழிங்கநல்லூர்) உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வெள்ள நிவாரணப் பணிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூடுதலாகக் கவனிப்பார்.
மின்சாரப் பெட்டிகள்: பருவமழை காலம் என்பதால், மழை நீர் புகாத வகையில் தெருவோர மின்சார பகிர்மானப் பெட்டிகளை நல்ல முறையில் பராமரித்து அவற்றை உயரத்தில் அமைக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.
தண்ணீர் விரைவாக வெளியேறாத பகுதிகளை உடனடியாகக் கண்டறிந்து அதனை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம்களை நடத்தி தொற்று நோய்கள் ஏற்படாத வகையில் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.