அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை முதல்வர் காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image
சென்னை வியாசர்பாடி, ஓட்டேரி நம்மாழ்வார் கால்வாய் உள்பட வெள்ளம் பாதித்தப் பகுதிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின். உடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, சுதர்சனம்.
Updated On :2 நவம்பர் 2017, 8:24 pm

DIN

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் இறுதிச் சடங்கில் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். 
அதைத் தொடர்ந்து ஓட்டேரி நம்மாழ்வார் கால்வாய் மற்றும் வியாசர்பாடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: 
ஓட்டேரி நம்மாழ்வார் கால்வாயைப் பார்வையிட்டேன். ஆகாயத் தாமரையும், கோரைப்புல்லும் மண்டிக் கிடக்கிறது. அதனைத் தூர்வார வேண்டும் என்று முன்பே அரசுக்கு வலியுறுத்தினோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அந்தக் கால்வாயைத் தூர்வாரியிருந்தால், அந்தப் பகுதியில் மழை நீர்தேங்கியிருக்காது.
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் வேதனைக்குரியது. பருவமழை வருவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். 
மின்கசிவு ஏற்பட்டு, ஆபத்து ஏற்படாத வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் 4 நாள்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையா?
மழை வெள்ளப் பாதிப்பு தடுப்புப் பணிகளில் ஈடுபட கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தான் ரூ.8.53 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் 20 நாள்களுக்கு முன்பே பருவமழை தொடர்பாக எச்சரித்தது. 
சன்னையில் மழை என்றால் சேலத்தில் குடை பிடிப்பதுபோல அரசின் நடவடிக்கை உள்ளது. எனவே, இனியாவது வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட வேண்டும். வெள்ளத் தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபடாததைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்துமா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இது போராடும் நேரம் இல்லை. நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோம். பருவமழை முடிந்த பிறகு போராட்டம் குறித்து ஆலோசிப்போம் என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி உள்பட பலர் ஸ்டாலினுடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.