பரபரப்பை ஏற்படுத்தி, காரியங்களை சாதித்துக்கொள்ள மத்திய அரசு, வருமான வரித் துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பெரியார் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை கூறியது:
அண்மைக்காலமாக நாடு முழுவதும் எதிர்கட்சியினர் உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அச்சோதனைகளின் முடிவுகள் இதுநாள் வரை தெரியவில்லை. வருமான வரி சோதனை மூலம் பரபரப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் பல காரியங்களை சாதிக்க மத்திய அரசு வருமான வரித் துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் கீ.வீரமணி.
முன்னதாக , புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே பாழடைந்த நிலையில் உள்ள பெரியார் நூலகத்தை கி.வீரமணி பார்வையிட்டார். அப்போது, மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.