ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன: வருமானவரித் துறை தகவல்

சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித் துறைச் சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:00 pm

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை இன்று அதிகாலை சோதனையை தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து, ஜெயா டிவிக்கு தொடர்புடைய அலுவலங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் தினகரன் வீடு, சசிகலா சகோதரர் திவாகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 190 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில் சுமார் 1,800 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீநி வெட்ஸ் மஹி என்ற திருணத்துக்கு செல்வதுபோன்ற வாகனங்களில் சோதனை நடத்தும் அதிகாரிகள் வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை முதலே தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Related Article

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், மருத்துவர் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனை

வருமானவரி சோதனை ஊழல் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமைய வேண்டும்: ஈஸ்வரன்

சோதனைக்கு இடையே கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்

டிடிவி தினகரனின் பண்ணை வீடு, காகித ஆலையில் அதிகாரிகள் சோதனை

சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டிலும் வருமானவரித் துறை சோதனை

திவாகரனின் கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை

சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் சோதனை

கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.