2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சில இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.17) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:14 pm

DIN

தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.17) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்ôழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. அதன் பிறகு, மழை அளவு குறைந்தது. தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது. இதே நிலை தொடரும். தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக ஒடிஸா-மேற்கு வங்க கடற்கரை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 
சென்னையில்...சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் சில இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகத்தில் அடுத்த 4 அல்லது 5 நாள்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றார்.
மழை பதிவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தலா 30 மி.மீ., வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் மைலம், கடலூரில் 20 மி.மீ., தருமபுரி மாவட்டம் அரூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், திருவள்ளூரில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.