அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணி வரவேற்கத்தக்கது

தமிழகத்தில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என ஆளுநர் ஆய்வு செய்வது வரவேற்கக்கூடியது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:13 pm

DIN

தமிழகத்தில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என ஆளுநர் ஆய்வு செய்வது வரவேற்கக்கூடியது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மீண்டும் தெய்வ பக்தி, தேச பக்தி மிளிரத் தொடங்கியுள்ளதால், பாஜக வளர்ச்சிக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. ஹிந்து தீவிரவாதம் என்ற நடிகர் கமலஹாசனின் கருத்தும், அந்த சொல்லும் தவறானது. ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. 
ஒரு மாநிலத்தில் அவசர காலத்தின்போது மட்டும் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது ஆளுநரின் பணி எனக் கருதுவது தவறு. அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்து கேட்டறிவதும் அவரது பணிதான். அந்த வகையில் தமிழக ஆளுநரின் செயல்பாடு வரவேற்கக்கூடியது. மாநில அரசும் அதனை வரவேற்றுள்ளது. இதில் மாநில அரசின் அதிகாரம் ஏதும் பறிக்கப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை நடந்தால் நல்லதுதான்.
தமிழக அரசின் செயல்பாடு வரவேற்கக்கூடியதாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, நிர்வாகத்தை படிப்படியாக நிலைநிறுத்தி வருகின்றனர். 
தமிழகத்திலும், புதுவையிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி உள்ளாட்சி நிர்வாகத்தை காக்க வேண்டும். தேர்தல், கூட்டணி பற்றி பாஜக சிந்திக்கவில்லை என்றார் இல.கணேசன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.