வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் ரூ.20 லட்சம் நிதி! 

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமைய உத்தேசித்துள்ள தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் இன்று ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 9:35 am

DIN

சென்னை: அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமைய உத்தேசித்துள்ள தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் இன்று ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.

உலகளாவிய தமிழ் ஆர்வலர்களின் ஒன்று சேர்ந்து உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நமது தமிழ் மொழிக்காக தனி இருக்கை ஒன்றை அமைக்க உத்தேசித்துள்ளனர். அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது. அதேபோல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல் இன்று ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள நடிகர் கமலின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் 'தமிழுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது; பொருள் கொடுக்க வேண்டும்' என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.