தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? நாளை அறிவிப்பு வெளியாகிறது? 

ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை நடைபெறவுள்ள அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

News image
Updated On :26 நவம்பர் 2017, 8:46 am

DIN

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை நடைபெறவுள்ள அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதனைத் தொடர்ந்து கட்சிகள் தத்தமது வேட்பாளர் தேர்வில் மும்முரமாகின.

முதல்கட்டமாக திமுக கடந்த முறை போட்டியிட்ட வழக்கறிஞர் மருது கணேஷையே வேட்பாளராக அறிவித்தது.

இந்நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.