ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் சாவு

விராலிமலை அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :27 நவம்பர் 2017, 6:25 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சாம்சன் மகன் ஹிமோபி(33),டைட்டஸ்(30) அண்ணன் தம்பிகளான இருவரும் நண்பர்களான திருவான்மியூரைச் தாம்சன் மகள் ஶ்ரீபா(24) மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த முருகேசன் மகன் சதீஸ்குமார்(24) ஆகிய நால்வரும் கடந்த சனிக்கிழமை காரில் சென்னையிலிருந்து மார்த்தாண்டம் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பி கொண்டிருந்தனர் காரை ஹிமோபி ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், மதுரை-திருச்சி நான்குவழிச்சாலை விராலிமலை அருகேயுள்ள விராலூர் பிரிவு சாலையருகே கார் சென்று கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுபேருந்து மீது மோதியுள்ளது இதில் காரை ஓட்டிவந்த ஹிமோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய டைட்டஸ், சதீஸ்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதில் காரில் பயணம் செய்த ஶ்ரீபா அதிஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார்.

தகவலறிந்து நிகழ்விடம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. செல்வராஜ் விபத்து குறித்து கேட்டறிந்து மேலும் இதுபோன்ற விபத்துக்கள் நேரிடாதாறு சாலை தடுப்பு கட்டைகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறித்தினார். இதுகுறித்து வழக்கு பதிந்த விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் அரசு பேருந்து ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்ணனை(48) கைது செய்து விசாரிக்கின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.